ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் plastic பைகள், உணவை எடுத்துச் செல்லும் கொள்கலன்களை இறக்குமதி செய்யவோ அல்லது தயாரிக்கவோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையில் straws, உணவை எடுத்துச் செல்லும் கொள்கலன்கள், மளிகை பைகள், கத்தி, முட்கரண்டி ஆகியவை அடங்குகின்றன.
Plastic மாசுபாட்டை குறைப்பதில் Liberal அரசாங்கம் முழு முயற்சியுடன் உள்ளது என இந்த அறிவிப்பின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault கூறினார்.