தேசியம்
செய்திகள்

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற வரவேற்புக்கு நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது  ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது போன்ற தவறு மீண்டும் நிகழாது என வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்கட்கிழமை (13) தெரிவித்துள்ளார்.
Ottawaவில் உள்ள தூதரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரஷ்ய தின கொண்டாட்டத்தில் கனடிய வெளியுறவு துறையை சேர்ந்த நெறிமுறை அதிகாரியின் துணைத் தலைவர் கலந்து கொண்டார்.

இந்த வரவேற்புக்கு நிகழ்வில் கனேடிய பிரதிநிதியை அனுப்புவதற்கான முடிவு வெளியுறவு துறையினால் எடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

கனடா தின நிகழ்வுகளுக்கு ரஷ்ய அதிகாரிகள் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கைக்கு குறித்து எதிர்க்கட்சிகளும் உக்ரேனிய கனடிய பேரவையும் கண்டனம் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் கொடூரமான படையெடுப்பிற்கு எதிராக போராடும் உக்ரைனுடன் கனடா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என அமைச்சர் Joly கூறினார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக கனேடிய அரசாங்கம் ரஷ்யா மீது தொடர்ச்சியான பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது.

Related posts

முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும்: Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment