December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

கனடிய அரசாங்கத்தின் COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

மத்திய COVID  கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் June மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக Health கனடாவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனமும் செவ்வாய்க்கிழமை (31) அறிவித்தன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை தொடர்ந்து கோரவுள்ளதாகவும் மத்திய அரசாங்கம் அறிவித்தது.

தடுப்பூசி போடப்படாத கனேடியர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு முன்னர்  எடுக்கப்பட்ட ஒரு மூலக்கூறு COVID சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் போன்ற நடைமுறைகளும் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.
கனடாவிற்கு வரும் அனைத்து பயணிகளும், ArriveCAN செயலி மூலம் தங்கள் தகவலைத் தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
மீதமுள்ள அனைத்து COVID பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு மத்திய அரசைக் கோரும் Conservative  கட்சியின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை மாற்றும் Ontario!

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது

Lankathas Pathmanathan

Leave a Comment