தேசியம்
செய்திகள்

கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது: இளவரசர் Charles

கனடிய முதற்குடியினர்களுடன் நல்லிணக்கம் குறித்த கருத்துக்களை கனடாவுக்கு சுற்றுப்பயணம் ஆரம்பித்துள்ள இளவரசர் Charles தெரிவித்துள்ளார்.

இளவரசர் Charles, Duchess of Cornwall கமிலாவுடன் மூன்று நாள் கனடிய சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை (17) St. John’s New Found Landஇல்  ஆரம்பித்தார்.

இந்த பயணம் பெரும்பாலும் கனடிய முதற்குடியினர் மக்களுடன் நல்லிணக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளது.

கனேடிய அரசாங்க விமானத்தில் St. John சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த தம்பதியினரை, மாகாண சபையில் பிரதமர்  Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் வரவேற்றனர்.

 ஆளுநர் நாயகம் Simon,  அவர்கள் இருவரையும் Inuktitut மொழியில் கனடாவிற்கு வரவேற்றார்.
கனடாவில் அவர்கள் சந்திக்கும் முதற்குடியினர் குழுக்களை செவிமடுக்கவும், அவர்களின் கதைகளை அறிந்து கொள்ளவும் தம்பதியினரை  Simon கோரினார் .
கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை தனது உரையில் இளவரசர் குறிப்பிட்டார்

கடந்த காலத்தின் இருண்ட, மிகவும் கடினமான அம்சங்களைப் புரிந்து கொள்வதற்கான புதிய வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் Charles தனது உரையில் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தின் முக்கியமான செயல்முறை குறித்து ஆளுநர் நாயகத்துடன் பேசியதாக இளவரசர் கூறினார்.

இந்த பயணத்தின் போது தம்பதியினர் ஈடுபடும் விவாதங்களில் நல்லிணக்கம் ஒரு பகுதியாக இருக்கும் என பிரதமர் Trudeau தெரிவித்தார்
ஆனாலும், வதிவிட பாடசாலைகள் குறித்து இங்கிலாந்தின் மகாராணி மன்னிப்பு கோர வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை பிரதமர் தவிர்த்தார்
செவ்வாய் இரவு தம்பதியினர் Ottawaவை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த  சுற்றுப்பயணம் அவர்களை Northwest பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லும்.

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

Lankathas Pathmanathan

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment