December 12, 2024
தேசியம்
செய்திகள்

Montrealலில் Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை

Montrealலில் அமையவுள்ள Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை கனடாவை mRNA தடுப்பூசிகளின் தலைநகராக மாற்றும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Modernaவின் புதிய தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை Montreal  நகரில் அமையும் என வெள்ளிக்கிழமை (29) அறிவிக்கப்பட்டது

இது கனடாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் நீண்ட கால விநியோகத்தை உறுதிப்படுத்தும் என  Moderna நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கனடாவில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான திறனை வலுப்படுத்த அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உறுதியளித்துள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை, 2024ல் செயல்பாட்டுக்கு வரும் எனவும்  200 முதல் 300 பேர் வரை இங்கு பணிபுரிவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் COVID தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும் Trudeau  கூறினார்.
Montrealலில் தயாரிக்கப்படும் Moderna  தடுப்பூசிகளை பெறும் முதல் நாடாக கனடா இருக்கும் என புத்தாக்க அமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்தார்.

Related posts

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment