தேசியம்
செய்திகள்

31 ஆண்டுகளில் மிக அதிகமாக பதிவாகியுள்ள வருடாந்த பணவீக்க விகிதம்

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் 1991 ஆம் ஆண்டின் பின்னர் மிக அதிகமாக பதிவாகியுள்ளது.

வருடாந்த பணவீக்க விகிதம் March மாதத்தில் 6.7 சதவீதத்தை எட்டியது.

இது 31 ஆண்டுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஆண்டுக்கு ஆண்டு மிக விரைவான அதிகரிப்பு என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

1991 ஜனவரியில் GST அறிமுகப்படுத்தப்பட்டபோது பணவீக்கம் 6.9 சதவீதத்தை எட்டியதில் இருந்து இது அதிகபட்ச அதிகரிப்பாகும்.

February மாதத்தில் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது.

எரிபொருளின் விலை உயர்வே March மாதத்தில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு March மாதத்துடன் ஒப்பிடுகையில் எரிபொருளின் விலை இந்த ஆண்டு 39.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Calgary பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

Leave a Comment