தேசியம்
செய்திகள்

கனேடிய மேலவை உறுப்பினர்கள் மீது ரஷ்யா தடை உத்தரவு

கனேடிய மேலவை உறுப்பினர்கள் (Senators) மீது ரஷ்யா தடை உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது.

கனேடிய மேலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ரஷ்யாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய 90 கனேடிய மேலவை உறுப்பினர்களில் 86 பேர் ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் ரஷ்ய பொருளாதாரத் தடைகளுக்கு எதிர் நடவடிக்கையாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் ரஷ்ய அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது தொடர்ந்தும் தடைகளை விதித்து வருகிறது.

கடந்த மாதம் பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Melanie Joly, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மீது ரஷ்யாவினால் தடை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் தடைகள் திட்டமிடப்பட்டுள்ளது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

Related posts

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan

Leave a Comment