தேசியம்
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் போர் நிறுத்தத்திற்கான  அழைப்பை கனடாவின் வெளியுறவு அமைச்சர்  விடுத்தார்.
ரஷ்ய ஆட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய அரசுக்கு இந்த போர் நிறுத்தம் அவசியமென கனடிய வெளியுறவு அமைச்சர்  Melanie Joly கூறினார்.

அதிகபட்ச அழுத்தத்தை திணிப்பதன் மூலம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது உக்ரேனியர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்  Joly கூறினார்..

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர் Justin Trudeau, அவரை கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பை விடுத்தார்.

மெய்நிகர் மூலம் கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான இந்த  அழைப்பை உக்ரேனிய அதிபர் Volodymyr Zelenskyy  ஏற்றுக் கொண்டார்.

Related posts

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது!

Gaya Raja

Leave a Comment