இந்தியா, மொராக்கோ ஆகிய நாடுகளுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகள் கனடிய அரசாங்கம் நீக்கியுள்ளது.
மத்திய அரசின் இணையதளத்தில் இந்த இரண்டு நாடுகளுக்கான புதிய பயண ஆலோசனை வெளியாகியுள்ளது.
அதில் இந்தியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்து கனடாவிற்கு வரும் விமானங்களுக்கான சிறப்பு COVID தொடர்பான நுழைவுத் தேவைகளும் தகவல்களும் வியாழக்கிழமை (27) முதல் அகற்றப்பட்டுள்ளன.
அதிகரித்த தொற்று காரணமாக கடந்த Aprilலில் இந்தியாவிலிருந்து, Augustடில் மொரோக்கோவிலிருந்து நேரடி விமானங்களை கனடிய அரசாங்கம் நிறுத்தியது
September மாதத்தில் இந்தியாவிற்கும், மொராக்கோவிற்கு Octoberரிலும் இந்த தடை நீக்கப்பட்டது.