British Colombiaவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என நம்பப்படுகிறது.
ஆனால் அவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் British Colombiaவில் தற்போது நிகழ்ந்து வரும் குழு மோதலுக்கும் தொடர்பு இல்லை என கூறப்படுகிறது
திங்கட்கிழமை நிகழ்ந்த இலக்கு வைக்கப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணைகளை விசாரணையாளர்கள் தொடர்கின்றனர்.