December 12, 2024
தேசியம்
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

COVID கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (20) அறிவித்தது.

உணவகங்களின் உட்புறத்தில் இருந்து உணவு உண்பதற்கு, உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பதற்கு, ஒன்று கூடக் கூடியவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

Ontarioவில் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான மூன்று படி திட்டத்தின் முதல் பகுதியாக இந்த அறிவித்தலை முதல்வர் Doug Ford வெளியிட்டார்.

நாங்கள் இப்போது கவனமாகவும் படிப்படியாகவும் பொது சுகாதார நடவடிக்கைகளை எளிதாக்கும் நிலையில் இருக்கிறோம் என வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் கூறினார்.

பொது சுகாதாரப் போக்குகளை மாகாணம் கண்காணிக்கும் பொருட்டு, மீண்டும் திறக்கும் ஒவ்வொரு படியும் 21 நாட்களுக்குப் பிரிக்கப்படும்.

மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாவது படி February 21ஆம் திகதியும், மூன்றாவது படி March 14ஆம் திகதியும் நடைமுறைக்கு வர உள்ளது.

Related posts

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

Gaya Raja

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment