மாகாண சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தை நீதன் சான் இந்த மாதம் ஆரம்பிக்கின்றார்.
எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் நீதன் சான் போட்டியிடுகின்றார்.
Scarborough Centre தொகுதியின் புதிய ஜனநாயக கட்சியின் (NDP) வேட்பாளராக நீதன் சான் போட்டியிடவுள்ளார்.
இந்த தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை January 26, 2022 ஆரம்பிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் Ontario மாகாண NDP தலைவி Andrea Horwath உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
நீதன் சான், முன்னர் Toronto நகரசபை உறுப்பினராகவும், York பிராந்திய கல்விச்சபை உறுப்பினராகவும் தெரிவானவர்.
2003ஆம் ஆண்டு முதல் Liberal கட்சியின் சார்பின்ல் Brad Duguid பிரதிநிதித்துவப்படுத்திய Scarborough Centre தொகுதியில் கடந்த தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது.
தற்போது அந்தத் தொகுதியை Christina Mitas பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
ஆனாலும் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார்