தேசியம்
செய்திகள்

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Quebecகின் இரவு நேர ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கப்படுகிறது .

Quebecகில் இரவு 10 மணி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் January 17ஆம் திகதி  விலத்தப்படும் என வியாழக்கிழமை (13) முதல்வர் Francois Legault அறிவித்தார்.

Omicron திரிபின் பரவல் மாகாணத்தில் உச்சமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கணித்துள்ள நிலையில் இன்றைய இந்த அறிவித்தல் வெளியானது.

எதிர்வரும் வாரங்களில் உணவகங்களும்  பிற இடங்கள் திறக்கப்படும் என நம்புவதாகவும் முதல்வர்  கூறினார்.

புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாக, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை Legault அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

மீண்டும் திங்களன்று நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!  

Gaya Raja

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment