தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது: பிரதமர் Trudeau

COVID தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக தடுப்பூசி போட மறுக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என Quebec முதல்வர் François Legault அறிவித்த மறுநாள் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

தடுப்பூசி போடுவதற்கு மக்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து வெவ்வேறு மாகாணங்கள் வெவ்வேறு முடிவுகளை எடுப்பதாக Trudeau கூறினார்.

மத்திய அரசாங்கமாக, அந்த முடிவுகளில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதற்கும் உதவியாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஆனாலும் Quebec அரசாங்கத்தின் இந்த யோசனையை ஆதரிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முன், திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர்  Trudeau கூறினார்.

Related posts

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தரலாம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு!

Gaya Raja

Leave a Comment