COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதை மாகாணங்கள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.
COVID தொற்றுகளின் இடைவிடாத பரவலின் மத்தியில் மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் Jean-Yves Duclos கூறினார்.
எமது சுகாதாரப் பாதுகாப்பு நிலை பலவீனமாக உள்ள நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி தடுப்பூசி மூலம் மட்டுமே என வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
Quebec மாகாணத்தை உதாரணமாக்கிய அவர், அங்கு தடுப்பூசி போடாததால் 50 சதவீதத்தினர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்.
ஆனாலும் கட்டாய தடுப்பூசி கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாகாணங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தனது அரசாங்கம் தடுப்பூசிகளை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என Alberta முதல்வர் Jason Kenney தெரிவித்தார்