தேசியம்
செய்திகள்

மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்தும் Ontario!

Ontario மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்துகிறது.

சமீபத்திய COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக பாடசாலைக்கு திரும்புவதை January 5ஆம் திகதிவரை  Ontario  தாமதப்படுத்துகிறது.

வியாழக்கிழமை (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Kieran Moore  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் வெளியான செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford அல்லது கல்வி அமைச்சர் Stephen Lecce ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

Ontario  முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாணவர்கள் குளிர்கால இடைவேளையை தொடர்ந்து January 3ஆம் திகதி பாடசாலைக்கு திரும்ப இருந்தனர்.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரிசைப்படுத்த கால அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தாமதம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

AstraZeneca தடுப்பூசி- இரத்த உறைவால் New Brunswickகில் இரண்டாவது மரணம்!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

Leave a Comment