Ontarioவில் Pfizer COVID தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது.
ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள் Moderna தடுப்பூசியை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் January மாதத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து கூடுதலாக நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் அவற்றின் விநியோகம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.