December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January முதல் booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January மாதம் முதல் COVID booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என Ontario மாகாணம் அறிவிக்கிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாண தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran Moore இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இரண்டாவது தடுப்பூசிக்குப் பின்னர், சுமார் ஆறு மாதங்கள் அல்லது 168 நாட்களுக்குப் பின்னர் booster தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

December 13 முதல், 50 வயதுக்கு மேற்பட்ட சுமார் 5.5 மில்லியன் Ontario வாசிகள் தங்கள் booster தடுப்பூசியை பெறத் தகுதி பெறுவார்கள்.

Omicron திரிபு எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை கருத்தில் கொண்டு, Ontarioவில் ஒரு வலுவான மூன்றாவது தடுப்பூசிக்கான மூலோபாயம் முக்கியமானது எனவும் Moore தெரிவித்தார்.

அதிகமான Ontario வாசிகள் booster தடுப்பூசிக்கு தகுதி பெறுவதால், முழுமையாக தடுப்பூசி போடுவதன் அர்த்தம் என்ன என்பதை மறுவரையறை செய்வதற்கான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளதாக அவர்  கூறினார்.

Related posts

கனடாவின் பயண கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன!

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!

Gaya Raja

கனடாவில் 168 Monkeypox தொற்றுகள் பதிவு

Leave a Comment