கனேடிய நாடாளுமன்றம் November மாதம் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றது.
September மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பிரதமர் Justin Trudeau தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார்.
புதிய அமைச்சரவைப் பட்டியலை Trudeau, October மாதம் 26ஆம் திகதி வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியின் காலதாமதம் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
இதேவேளை நாடாளுமன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விவாதிக்க அடுத்த வார ஆரம்பத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் Trudeau தொலைபேசியில் பேச திட்டமிட்டுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.