தேசியம்
செய்திகள்

போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு 12 ஆயிரம் டொலர் அபராதம்!

Quebecகில் பாடசாலைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அருகில் போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் 12 ஆயிரம் டொலர்கள் வரை அபராதத்தை எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை Quebec அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் விதிமுறைகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படலாம்.

மருத்துவமனைகள், பாடசாலைகள் தவிர குழந்தை பராமரிப்பு நிலையங்கள் அல்லது COVID பரிசோதனை மற்றும் தடுப்பூசி தளங்களுக்கு அருகில் போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் இந்த அபராதத்தை எதிர்கொள்ளலாம். .

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என கூறிய Quebec அரசாங்கம் இதன் இறுதித் திகதியை அறிவிக்கவில்லை.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், March 2020இல் அறிவிக்கப்பட்ட சுகாதார அவசர நிலையை அரசு அதிகாரப்பூர்வமாக முடிக்கும் வரை இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரியவருகிறது .

Related posts

தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகள் பிரிக்கப்பட மாட்டார்கள் – இரண்டு கனேடிய விமான நிலையங்கள் முடிவு

Gaya Raja

அதிகரித்த வெப்பம் காரணமாக British Colombiaவில் 486 திடீர் மரணங்கள்!

Gaya Raja

375க்கு மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறினர்

Leave a Comment