கனடாவில் வியாழக்கிழமை நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
வியாழனன்று சுகாதார அதிகாரிகள் மொத்தம் 4,020 தொற்றுக்களை பதிவு செய்தனர்.
இதில் அதிகூடிய தொற்றுக்களை மீண்டும் Alberta மாகாணம் பதிவு செய்துள்ளது.
Albertaவில் 1,339 தொற்றுகளும் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.
தவிரவும் Ontarioவில் 865 தொற்றுகளும் 14 மரணங்களும், British Columbiaவில் 801 தொற்றுகளும் 6 மரணங்களும், Quebecகில் 699 தொற்றுகளும் ஒரு மரணமும் இன்று பதிவாகியுள்ளன.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்கள் இன்று பதிவாகியுள்ளன.
அதேவேளை கனடாவில் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளை 27 ஆயிரத்தை தாண்டும் அபாயம் தோன்றியுள்ளது.
கனடா இப்போது தகுதிவாய்ந்த மக்கள் தொகையில் 77 சதவிகிதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்கியுள்ளது.