Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னரான அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன.
மாகாண சுகாதார அதிகாரிகள் 781 தொற்றுக்களையும் 17 மரணங்களையும் அறிவித்தனர்.
இவற்றில் 14 மரணங்கள் பல மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வெள்ளிக்கிழமை பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை June மாத ஆரம்பத்தில் Ontario வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை விலத்திய சில நாட்களின் பின்னரான அதிக எண்ணிக்கையாகும்.
இதனால் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்தது.
ஒரு வாரத்திற்கு முன்னர் 518 ஆகவும் வியாழக்கிழமை 646 ஆகவும் இருந்த ஏழு நாள் சராசரி வெள்ளிக்கிழமை 665 ஆக அதிகரித்துள்ளது.
Ontarioவில் வெள்ளிகிழமை காலை வரை 12 வயதும், அதற்கு மேற்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
76 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.