தேசியம்
செய்திகள்

80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளது: தலைமை சுகாதார அதிகாரி

தகுதியுள்ளவர்களில்  80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

வியாழக்கிழமை மதியம் வரை, கனடாவில் 41 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 26 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அல்லது தகுதியுள்ளவர்களில் 77.9 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். 5 மில்லியன் பேர், அல்லது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 44.8 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இது பெரியதொரு முன்னேற்றம் என கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam தெரிவித்தார்.

ஆனாலும் அண்மைக் காலத்தில் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவதாக  சுகாதார  அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கனடியர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறும் சுகாதார அதிகாரிகள், முதலாவது தடுப்பூசிக்கான அதிகரிப்பு விகிதம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இப்போது நாம் இருக்கும் இடத்தைப் பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய Tam, ஆனால் நாம் இலக்கை கடந்து விட்டோம் என கருதக் கூடாது என எச்சரித்தார்.

Related posts

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

உலகின் மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson முதலாம் இடத்தில்

Lankathas Pathmanathan

Leave a Comment