75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவுக்கான திகதியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
அடுத்த July மாதம் 75 வயதாகும் கனேடியர்கள் இந்த ஆண்டு August மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் 500 டொலர்களை பெறுவார்கள். மூத்தோர் அமைச்சர் Deb Schulte இந்த அறிவித்தலை வெளியிட்டார்
இந்த ஒரு தடவைக்கான கொடுப்பனவு கடந்த April மாதம் வரவு செலவுத் திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதியோர் நலன்கள் அதிகரிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அடுத்த ஆண்டு July மாதம் முதல் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் நலன் கொடுப்பனவில் 10 சதவீத உயர்வை அரசாங்கம் அறிவித்தது. இது 3.3 மில்லியன் ஓய்வு பெற்றவர்களுக்கு 766 டொலர்கள் கூடுதல் சலுகைகளை அளிக்கிறது.