தரக் கட்டுப்பாட்டு காரணமாக 300,000 Johnson & Johnson தடுப்பூசிகளை உபயோகத்திற்கு அனுமதிப்பதில்லை என Health கனடா முடிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை Health கனடா இது குறித்த அறிவித்தலை ஒரு அறிக்கையில் வெளியிட்டது. இந்த தடுப்பூசிகளின் தர மதிப்பாய்வை நிறைவு செய்துள்ள நிலையில் கனேடியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க அவற்றை மாகாணங்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என Health கனடா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் Baltimore உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் April மாதத்தில் கனடாவை வந்தடைந்தன. இந்த உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு தயாரிப்புகளையும் கனடா ஏற்காது என்பதையும் Health கனடா உறுதிப்படுத்தியது.