தொற்று காலத்தில் ஒரு தேர்தல் நடைபெறுவதை கண்டிப்பதற்கும், அது நிகழாமல் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Bloc Quebecois கட்சியினால் இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தொற்றின் போது தேர்தல் ஒன்றை அறிவிப்பது பொறுப்பற்ற நகர்வு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் வாக்களித்தனர்
தொற்றின் மத்தியில் கனடியர்களுக்கு உதவுவதில் தனது முழுக் கவனமும் உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.