கனடா அமெரிக்க எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு New York சட்டமன்ற உறுப்பினர் Brian Higgins கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் .கனடாவுடன் எல்லையை மீண்டும் திறப்பது குறித்த தனது கோரிக்கையை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் புள்ளிவிவரங்கள் ஆதரிப்பதாக அவர் கூறினார்.
தடுப்பூசி வழங்குதல் முயற்சிகளில் நிலையான முன்னேற்றத்தை கனடா அடைந்துள்ளது என கூறிய Higgins, 15 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை கனடாவுக்கு அமெரிக்கா வழங்கியதை சுட்டிக்காட்டினார்.