December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கனடாவில் இதுவரை Pfizer, Moderna, AstraZeneca, Johnson & Johnson ஆகிய நான்கு COVID
தடுப்பூசிகளுக்கு Health கனடா அனுமதி வழங்கியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப் பெற யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்விக்கான பதிலாக நோய் எதிர்ப்புத் திறனூட்டலு க்கான தேசிய ஆலோசனைக் குழுவின் (NACI) பரிந்துரைகளுக்கமைய முடிவுகள் மாகாண மட்டத்தில் எடுக்கப்படுகின்றன.

PFIZER-BIONTECH

Health கனடா December மாதம் 9ஆம் திகதி Pfizer தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது. இது
தொற்றை தடுக்க கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசியாகும். இரண்டு
தடவைகளில் வழங்கப்படும் இந்த mRNA தடுப்பூசியை 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது மருத்துவமனைகள், Pop-up பரிசோதனை நிலையங்களில் வழங்கப்படுகிறது.Pfizer
தடுப்பூசியை December மாதத்தில் அரசாங்கம் முதலில் விநியோகிக்க ஆரம்பித்தது. இந்தக் கட்டுரை அச்சுக்கு செல்லும் வரை நாடாளாவிய ரீதியில் 100 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

April மாதத்தில் கனடா ஒவ்வொரு வாரமும் 10 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் பெறுகையில், விநியோகம் இரட்டிப்பாகிறது.

July மாத ஆரம்பம் வரை வாரத்திற்கு 20 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது. September மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது என்னும் இலக்கை அடைய அரசாங்கத்தை இது ஊக்குவிக்கிறது.

தொடர்ந்தும் தடுப்பூசிகள் கிடைத்தால், முதல் தடுப்பூசிக்கும் இரண்டாம் தடுப்பூசிக்கும்
இடைப்பட்ட காத்திருப்பு கால அளவு நான்கு மாதத்தில் இருந்து ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக கூட குறைவடைய கூடும் என NACI குறிப்பிட்டுள்ளது. இதுவரை, 760 இலட்சம் Pfizer தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் முதலீடு செய்துள்ளது.

MODERNA

mRNA Moderna தடுப்பூசியை 18 வயதுடையவர்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கும் வழங்கலாம் என 23ஆம் திகதி December மாதம் Health கனடா அங்கீ கரித்தது. Pfizer தடுப்பூசியைப் போலவே இரண்டு தடவைகளில் வழங்கப்படும் இந்த தடுப்பூசியும் உள்ளூர் மருத்துவமனைகள், mass immunization clinics, Pop-up பரிசோதனை நிலையங்களில் வழங்கப்படுகின்றது.

Health கனடாவின் ஒப்புதல் கிடைத்த மறுதினம் Moderna தடுப்பூசிகள் கனடாவை
வந்தடைந்தன. அவை முதன் முதலில் கனடாவின் வடக்கு பகுதிக்கு விநியோகிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை அச்சுக்கு செல்லும் வரை, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 29 இலட்சம் Moderna தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, Moderna மருந்து நிறுவனத்துடன் 440 இலட்சம் தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ASTRAZENECA

AstraZeneca தடுப்பூசி – அறிவியல் பூர்வமாக ChAdOx1-S என அழைக்கப்படுகிறது – இது
AstraZeneca மற்றும் Serum இந்திய நிறுவனத்தால் (Institute of India) தயாரிக்கப்படுகிறது. இது COVAI SHIELD என்ற தர குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியும் அதன் இரு உற்பத்தியாளர்களும் February மாதம் 26ஆம் திகதி Health
கனடாவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த adenovirus vector தடுப்பூசி இரண்டு தடவைகளில் வழங்கப்படுகின்றது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களுக்கு இந்த தடுப்பூசி முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது, இந்த தடுப்பூசியை எந்த வயதினர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் NACI பரிந்துரைகளை செய்துள்ளது.

March மாதத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை
வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்த தடுப்பூசியைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, mRNA தடுப்பூசிக்காக காத்திருக்க விரும்பாத, 30 வயதிற்கு மேற்பட்ட எவரும் பெற்றுக்கொள்ளலாம் என NACI தற்போது பரிந்துரைத்துள்ளது. இந்த தடுப்பூசி தற்போது மருந்தகங்களில் கிடைக்கிறது. நேரடியாகச் சென்று இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் பல இடங்களில் உள்ளன. இது கனேடியர்களுக்கு தடுப்பூசிக்கான அணுகலை அதிகமாக்குகிறது.

Astra Zeneca தடுப்பூசி முதன் முதலில் கனடாவில் March மாதத்தில் விநியோகிக் கப்பட்டது. இந்தக் கட்டுரை அச்சுக்கு செல்லும் வரை, நாடு முழுவதும் சுமார் 23 இல ட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வடமேற்கு பிரதேசங்களையும் (Northwest Territories), Nunavutடையும் தவிர, அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்
கொண்டுள்ளன.

இரண்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து அரசாங்கம் மொத்தமாக 220 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

JOHNSON & JOHNSON

Johnson & Johnson தடுப்பூசி March மாதம் 5ஆம் திகதி Health கனடாவால்
அங்கீகரிக்கப்பட்டது. இது ஒரே தடவையில் செலுத்தக்கூடிய adenovirus vector தடுப்பூசி. இந்த தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்க
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. AstraZeneca வை போலவே mRNA தடுப்பூசிக்காக காத்திருக்க
விரும்பாத, 30 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என NACI பரிந்துரைத்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள திட்டமிடுவது கடினமாக இருக்கும் என
நினைப்பவர்கள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துமாறு NACI பரிந்துரைத்துள்ளது. வீடற்றவர்கள், தற்காலிக தங்குமிடங்களில் வசிப்பவர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே தடவையில் செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசி அதிக அளவில் pop-up மருத்துவ பரிசோதனை நிலையங்களை உருவாக்கக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இறுதியாக கனடாவை வந்தடைந்த Johnson & Johnson தடுப்பூசிகள், தரக் கட்டுப்பாடு
தொடர்பான காரணத்தினால் Health கனடாவினால் கனேடியர்களுக்கு வழங்கப்படுவது இந்தக் கட்டுரை அச்சுக்கு செல்லும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
380 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகளை உற்பத்தியாளரிடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஏனைய தடுப்பூசிகள்

Medicago, Novavax, Sanofi and GlaxoSmithKline ஆகிய இரண்டு தடவைகளில் செலுத்தக்கூடிய தடுப்பூசிகளுக்கு Health கனடா இதுவரை அனுமதி வழங்காத போதும், இந்த மூன்று தடுப்பூசி விநியோகத்திற்கும் அரசாங்கம் பணம் செலுத்தியுள்ளது. அவற்றை பயன்படுத்த அனுமதி கிடைத்தால், தலா 750 இலட்சம் Medicago மற்றும் Novavax தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும், 720 இலட்சம் Sanofi and GlaxoSmithKline தடுப்பூசி கொள்வனவிற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது.

  • ராகவி புவிதாஸ் –

(தேசியம் சஞ்சிகையின் April 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்: நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்!

Gaya Raja

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja

இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள மாற்றங்கள் என்ன?

Gaya Raja

Leave a Comment