கடந்த செவ்வாய்கிழமை வரை கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட COVID தொற்றின் திரிபுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சராசரி ஏழு நாள் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை கனடாவில் புதன்கிழமை 7,992 என பதிவானது. இது முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதம் குறைவான தொற்றுக்களாகும் .
புதன்கிழமையுடன் கனடாவில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியதுடன், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 11 இலட்சத்தை தாண்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.