AstraZeneca COVID தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை என Health கனடா தெரிவித்துள்ளது.
AstraZeneca தடுப்பூசியை பெற்ற பெண் ஒருவர் இரத்த உறைவால் செவ்வாய்க்கிழமை Quebecகில் மரணமடைந்த நிலையில் இந்த உறுதிப்பாட்டை Health கனடா வெளியிட்டது. Montreal மருத்துவமனை ஒன்றில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. 54 வயதான பெண் ஒருவர் இவ்வாறு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக ஒரு அறிக்கையில் Health கனடா கூறியுள்ளது. இதே உறுதிப்பாட்டை Quebec மாகாண பொது சுகாதார இயக்குனர் வலியுறுத்தினார்.