AstraZeneca தடுப்பூசி வழங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும், கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிவதாக கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
AstraZeneca தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கனடாவில் தடுப்பூசி பயன்பாடு குறித்த அறிவியலை வழிநடத்தும் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவதாக வைத்தியர் Theresa Tam கூறினார். Health கனடா, கனடாவின் பொது சுகாதார நிறுவனம் மற்றும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு ஆகியன ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை AstraZeneca தடுப்பூசியின் உபயோகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் கனடாவில் தடுப்பூசி வழங்களில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.