கனடிய அரசாங்கம் இன்று கடுமையான புதிய துப்பாக்கி சட்டமூலம் ஒன்றை அறிவித்துள்ளது
பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்தச் சட்டமூலம், புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
கைத்துப்பாக்கிகளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லல் போன்றவற்றுக்கான கடுமையான விதிமுறைகளின் ஊடாக, இந்த அதிகாரம் உள்ளூராட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் Trudeau கூறினார். இதன் மூலம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீளக் கொள்வனவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் Trudeau இன்று அறிவித்தார்.