Ontarioவின் அனைத்து பகுதிகளும் இன்று அதிகாலை 12:01 முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளன .
முதல்வர் Doug Ford கடந்த திங்கள்கிழமை இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். COVID-19 modelling தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் ஒரு சில வணிகங்களைத் தவிர மற்றய அனைத்தையும் மூடுகின்றது. மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசியமானவை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் உடல் பயிற்சி நிலையங்கள், திரை அரங்குகள் உட்பட அனைத்து உட்புற வணிகங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த மூடுதல் மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் 28 நாட்களும், வடக்கு பகுதிகளில் 14 நாட்களும் நீடிக்கவுள்ளது. மாகாணத்தில் பொது நிதியுதவி பெற்ற ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகள் குறைந்தபட்சம் January மாதம் 11ஆம் திகதி வரை நேரடி கற்றலுக்காக மூடப்படும். மாகாணத்தின் வடக்கில் பொது சுகாதார பிராந்தியங்களில் பொது நிதியுதவி பெறும் அனைத்து பாடசாலைகள் January மாதம் 11ஆம் திகதி நேரடி கற்றலை ஆரம்பிக்க அனுமதிக்கப்படும். தெற்கு Ontarioவில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் January மாதம் 11ஆம் திகதி நேரடி கற்றலுக்கு அனுமதிக்கப்படும். ஆனால் தெற்கு Ontarioவில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் January மாதம் 25ஆம் திகதி வரை வகுப்பறைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.