Liberal அரசாங்கத்தின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இன்று (23) நிதி அமைச்சர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கையாக இது அமையும் எனக் கூறப்படுகின்றது. இந்த அறிக்கையில் தேசிய குழந்தை பராமரிப்பு திட்டம் குறித்த அறிவித்தல் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
COVID தொற்றின் பரவல் கரணமாக இந்த நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் தாக்கல் செய்யவில்லை. ஆனாலுல் கடந்த July மாதம் ஒ ரு நிதி அறிக்கையை அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில் பற்றாக்குறை 343.2 பில்லியன் டொலராக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது.