தேசியம்
செய்திகள்

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

வியாழக்கிழமை (22) ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை கனடா பதிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை மாத்திரம் மொத்தம் 2,786 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளன. முன்னர் October மாதம் 17ஆம் திகதி அதிகளவிலான தொற்றுக்கள் (2,698) கனடாவில் பதிவாகியிருந்தன.

British Columbia, Alberta ஆகிய மாகாணங்கள் வியாழக்கிழமை அதிகளவிலான ஒரு நாள் தொற்றுக்களை வியாழக்கிழமை அறிவித்தது. British Columbiaவில் 274, Albertaவில் 427 என வியாழக்கிழமை தொற்றுக்கள் பதிவாகின.

Quebec கனடாவில் தொற்றுநோயின் மையமாகத் தொடர்கிறது. ஏழு நாட்களில் ஆறாவது முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை Quebec வியாழக்கிழமை அறிவித்தது. Quebecகில் 1,033, Ontarioவில் 841, Manitobaவில் 147, Saskatchewanனில் 60, New Brunswickகில் 3, Newfoundland and Labradorரில் 1 என ஏனைய மாகாணங்களில் வியாழக்கிழமை தொற்றுக்கள் பதிவாகின.

இதுவரை கனடாவில் தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை 209,148 என பதிவாகியுள்ளது.

Related posts

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

Leave a Comment