கனடாவின் முற்போக்கான நிலையை பசுமைக் கட்சி பாதுகாக்கும் என கட்சியின் இணைத் தலைவர்களில் ஒருவரான Jonathan Pedneault தெரிவித்தார்.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிட்டார்.
பசுமைக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை நீண்டகால தலைவர் Elizabeth May உடன் இணைந்து Jonathan Pedneault, Montreal நகரில் ஞாயிறன்று ஆரம்பித்தார்.
காலநிலை மாற்றம், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்வாகத்தின் வரி அச்சுறுத்தல்கள் உட்பட கனடா இதுவரை எதிர்கொள்ளாத “மிகவும் கடினமான சவால்களை” எதிர்கொள்கிறது எனவும் அவர் கூறினார்.