15 ஆண்டுகளுக்கு முன்னர் உலக நிதி நெருக்கடியில் இருந்து கனேடிய பொருளாதாரத்தை மீட்டெடுத்த பெருமையை Mark Carney எடுத்துக் கொண்டுள்ளதாக முன்னாள் கனடிய பிரதமர் குற்றம் சாட்டுகின்றார்.
முன்னாள் பிரதமர் Stephen Harper இந்த விடயத்தில் Liberal தலைமை வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள Mark Carney மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
2008 நிதி நெருக்கடியின் ஆரம்பத்தில் Stephen Harper, கனடிய மத்திய வங்கியின் தலைமை பதவிக்கு Mark Carneyயை நியமித்திருந்தார்.
ஆனாலும் அந்த நேரம் எதிர்கொள்ளப்பட்ட உலக நிதி நெருக்கடியில் இருந்து கனடிய பொருளாதாரத்தை மீட்டெடுத்த பெருமை நிதியமைச்சர் Jim Flahertyயை சாரும் என Stephen Harper தெரிவித்தார்.
Liberal கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக March 9 ஆம் திகதி Ottawaவில் கூடுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர் இந்தக் கருத்து வெளியானது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் உள்ளனர்.
இதில் கருத்துக்கணிப்புகள், நிதி திரட்டல் அடிப்படையில் Mark Carney முன்னணியில் உள்ளார்.
March 9 அறிவிக்கப்படவுள்ள வெற்றியாளர், Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிப்பார்.
இந்த நிலையில் Conservative கட்சியின் நிதி திரட்டும் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட ஒரு கடிதத்தில் Mark Carney மீது Stephen Harper குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
கனடிய பொருளாதாரத்தை நாளாந்த அடிப்படையில் நிர்வகிப்பதில் Mark Carneyக்கு அனுபவம் இல்லை என Stephen Harper கூறினார்.