தேசியம்
செய்திகள்

Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் April மாதம் நடைபெறவுள்ளது.

முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Andy Fillmoreக்கு பதிலாக புதிய உறுப்பினரை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த இடைத்தேர்தல் April 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்று Halifax தொகுதிக்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிரதமர் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (02) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

கடந்த September மாதம் Halifax நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக Andy Fillmore தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்த இடைத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Shannon Miedema, NDP சார்பில் Lisa Roberts, Conservative கட்சியின் சார்பில் Mark Boudreau ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Andy Fillmore, 2015 ஆம் ஆண்டு முதல் முதல் Halifax தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அதற்கு முன்னர், 1997 முதல் புதிய ஜனநாயகக் கட்சியினர் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

March 24 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் Liberal கட்சி March 9ஆம் திகதி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

April 14 ஆம் திகதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த இடைத்தேர்தல் இரத்து செய்யப்படும்.

Related posts

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

கனேடிய, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு!

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment