உக்ரைன் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஐரோப்பியத் தலைவர்கள் வடிவமைக்கும் நிலையில் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
உக்ரைனில் அமைதியை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய இராணுவக் கூட்டணியில் கனடா இணைய இது வழிவகுக்கும் என Justin Trudeau கூறினார்.
கனடிய பிரதமர் அடுத்த வாரம் பதவி விலக உள்ள நிலையில் ஏனையவர்கள் அத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என Justin Trudeau மேலும் தெரிவித்தார்.
“எந்தவொரு ஒப்பந்தத்தையும் முறிப்பேன் என்பதை Vladimir Putin மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்” என Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (02) கூறினார்.
உக்ரேனிய சமாதான உடன்படிக்கைக்கான சாத்தியமான பாதையை கண்டறிவது குறித்து ஐரோப்பிய தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கனடிய உயர் ஸ்தானிகராலயத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் பேசினார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஆதரவை Justin Trudeau வெளிப்படுத்தினார்.
ரஷ்யா தனது சட்டவிரோத படையெடுப்பை நிறுத்த முடிவு செய்தால் மறுநாள் போர் முடிவடையும் எனவும் Justin Trudeau கூறினார்.