கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க Buckingham Palace மறுத்துள்ளது.
கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற வேண்டும் என சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கருத்து தெரிவித்து வருகிறார்.
கனடா இந்த இணைப்புக்கு ஒப்புக்கொண்டால், அமெரிக்காவினால் அச்சுறுத்தப்படும் கடுமையான வரி கட்டனங்களை தவிர்க்க முடியும் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறினார்.
இந்த விடயத்தில் தனது விருப்பத்தை நிறைவு செய்ய “பொருளாதார சக்தியை” பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் Donald Trump கூறினார்.
இந்த அழைப்பை கனடாவின் மத்திய, மாகாண தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
ஆனாலும் இந்த விடயம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என Buckingham Palace தெரிவித்தது.
Westminster சட்டத்தின்படி, மன்னர் Charles கனடாவின் தலைவராக இருக்கும்போதும், பிரதமரின் ஆலோசனையின் படியே மன்னர் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.