தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற Progressive Conservative!

Ontario மாகாண சபைத் தேர்தலில் Progressive Conservative  கட்சி வெற்றி பெற்றது.

வியாழக்கிழமை  (27)  நடைபெற்ற தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative  கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

Ontario மாகாணத்தில் Doug Ford பெறும் மூன்றாவது தொடர் பெரும்பான்மை வெற்றி இதுவாகும்.

Progressive Conservative கட்சி 80 ஆசனங்களையும், NDP 27 ஆசனங்களையும், Liberal கட்சி 14 ஆசனங்களையும் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் பசுமை கட்சி இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றதுடன், ஒரு தொகுதியில் சுயேச்சை உறுப்பினர் வெற்றி பெற்றார்.

63 ஆசனங்களை வெற்றி பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையில் Ontario PC கட்சி 80 ஆசனங்களை வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மை அரசை அமைக்கிறது.

27 ஆசனங்களை வெற்றி பெற்ற NDP மீண்டும் Ontario மாகாண சபையில் எதிர்க் கட்சியாகிறது.

Liberal கட்சியின் தலைவர் Bonnie Crombie போட்டியிட்ட Mississauga East-Cooksville தொகுதியில் தோல்வி அடைந்தார்.

ஆனால் 14 ஆசனங்களை வெற்றி பெற்ற Liberal கட்சி கடந்த முறை இழந்த உத்தியோகபூர்வ  கட்சி என்ற நிலைமை மீண்டும் பெறுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து தமிழ் வேட்பாளர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.

விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் வெற்றி பெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும்.

Related posts

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்கள் வெளியானது

Lankathas Pathmanathan

சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்! 

Gaya Raja

B.C. விமான விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment