துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் Danielle Smith முடிவு செய்தார்.
Alberta சுகாதார சேவைகள் – AHS – ஊழல் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் AHS தலைமை நிர்வாக அதிகாரி Athana Mentzelopoulos, ஆளும் ஐக்கிய Conservative கட்சியின் (UCP) உயர்மட்ட உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட பரந்த அளவிலான ஊழல் குறித்த குற்றச்சாட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து Alberta முதல்வர், சுகாதார அமைச்சர் Adriana LaGrange ஆகியோர் புதன்கிழமை (19) தமது முதலாவது அதிகாரப்பூர்வ கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டனர்.
இந்த விடயத்தில் தாங்கள் தவறு செய்யவில்லை என்ற முந்தைய கூற்றை முதவரும், சுகாதார அமைச்சரும் மீண்டும் வலியுறுத்தினர் .
இந்த நிலையில் Alberta Health, AHS ஆகியவற்றில் இரண்டு பதவி மாற்றங்களை முதல்வர் அறிவித்தார்.
இதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர் , தவறு செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் தான் காணவில்லை என முதல்வர் கூறினார்.
தனது சுகாதார அமைச்சருக்கு ஆதரவான நிலைப்பாட்டை முதல்வர் முன்வைத்தார்.
இந்த விடயத்தில் மூன்றாம் தரப்பு விசாரணையையும் அவர் கோரியுள்ளார் .