February 20, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவேன்: Doug Ford

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவேன் என Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford மீண்டும் வலியுறுத்தினார்.

Ontario மாகாண சபை தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம் திங்கட்கிழமை (17)  நடைபெற்றது.

Torontoவில் நடைபெறும் இந்தக் கட்சி தலைவர்கள் விவாதத்தில் Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford, Liberal கட்சி தலைவர் Bonnie Crombie, NDP தலைவர் Marit Stiles, பசுமை கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற Bonnie Crombie, முன்னர் NDPக்கு வாக்களித்தவர்களை தனக்கு வாக்களிக்குமாறு கோரினார்.

Doug Ford  அன்றாட மக்களின் சவால்களைப் புரிந்து கொள்ளவில்லை எனவும் Liberal கட்சி தலைவர் கூறினார்.

அதிகரித்து வரும் செலவுகள் மக்களைப் பாதிக்கின்றன, மாகாணத்தை பலவீனப்படுத்துகின்றன என Marit Stiles தெரிவித்தார்.

தேர்தலுக்கு 10 நாட்கள் மாத்திரம் உள்ள நிலையில் இறுதி விவாதமாக இந்த விவாதம்  நடைபெற்றது.

Ontario மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு February 27ஆம் திகதி நடைபெறுகிறது.

Related posts

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாலஸ்தீன பொதுமக்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் கனடா உதவி

Gaya Raja

COPA தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment