அதிகரித்து வரும் மளிகைப் பொருட்களின் விலையை ஈடுகட்டும் வகையில் மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை Ontario மாகாண NDP அறிவித்தது.
Ontario NDP தலைவர் Marit Stiles இந்தத் திட்டத்தை அறிவித்தார்.
Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தல் வெளியானது
Doug Ford அரசின் கீழ் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதன் அடிப்படையில் இந்தத் தள்ளுபடி தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என Marit Stiles கூறினார்.
முதல்வராக தேர்தெடுக்கப்படால், மளிகை பொருட்களை கொள்வனவு செய்ய ஏதுவாக, பணத்தை சேமிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவேன் என தெரிவித்த அவர், மளிகை பொருட்களின் விலையில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவேன் எனவும் உறுதியளித்தார்.
Ontario மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.