கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைக்கிறது.
மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை புதன்கிழமை (29) கால் சதவீதத்தால் குறைக்கும் முடிவை அறிவித்தது.
மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த முடிவை அறிவித்தார்.
இதன் மூலம் வட்டி விகிதத்தை 3 சதவீதமாக குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
கனடாவின் மத்திய வங்கி தொடர்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
பணவீக்கம் சுமார் 2 சதவீதமாக உள்ள அதேவேளை அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வட்டி விகித குறைப்பு அறிவித்தல் வெளியானது.
அமெரிக்க ஜனாதிபதி கனடிய இறக்குமதிகள் குறித்து விடுத்துவரும் எச்சரிக்கைகள் இந்த வட்டி விகிதக் குறைப்பு முடிவுக்கு காரணியாக இல்லை என Tiff Macklem கூறினார்.