கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதிக்கும் வரி திட்டம் February 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வார இறுதியில் இருந்து 25 சதவீத வரியை விதிக்க Donald Trump திட்டமிட்டுள்ளார் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதியுடன் விவாதித்ததாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் Karoline Leavitt தெரிவித்தார்.
இந்த வரிகள் February 1 ஆம் திகதியில் இருந்து அறவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்து Donald Trump மாறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில்”கனடியர்களை பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என கனடாவின் இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson கூறினார்.