கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்க Donald Trump ஆரம்பித்தால் ஆரம்ப பதிலடி திட்டத்தை திங்கட்கிழமை (20) வெளியிட கனடிய அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump எதிர்வரும் திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அவர் எச்சரித்து வருகின்றார்.
பதவியேற்பு தினமன்று உடனடியாக வரிகளை விதிக்க Donald Trump நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரியவருகிறது.
கனடிய பொருளாதாரத்திற்கு குறைவான தீங்கு விளைவிக்கும் 37 பில்லியன் டாலர் பொருட்களுக்கு இந்த எதிர் வரிவிதிப்புகள் பொருந்தும் என கூறப்படுகிறது
இந்த விடையத்தில் கனடாவின் தயார் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் Melanie Joly வெள்ளிக்கிழமை (17) கருத்து தெரிவித்தார்.
“இது அடிப்படையில் ஒரு வர்த்தகப் போரை ஆரம்பிப்பதாகும்” என அமைச்சர் கூறினார்.
வரி விதிக்கும் முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரை ஆரம்பிப்பார்கள் என தெரிவித்த Melanie Joly, இது பல தசாப்தங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும் எனவும் கூறினார்.