அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump முன்வைக்கும் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கு கனடா பதிலடி கொடுக்க வேண்டியதன் அவசியத்தை NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார்.
திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கு கனடாவின் பதிலடி நடவடிக்கையின் அவசியத்தை NDP தலைவர் தெளிவுபடுத்தினார்.
Donald Trump முன்வைக்கும் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கான கனடாவின் பதிலடி நடவடிக்கைகளின் அவசியத்தையும் Jagmeet Singh வலியுறுத்தினார்.
அமெரிக்காவிற்கு முக்கியமான கனிமங்களை ஏற்றுமதி செய்வதை கனடா கட்டுப்படுத்த வேண்டும் என Jagmeet Singh அழைப்பு விடுத்தார்.
வரி விடயத்தில் அவர் கனடாவுடன் சண்டையிட விரும்பினால், அது அமெரிக்கர்களையும் பாதிக்கப் போகிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார்.
அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை படிப்படியாக அதிகரிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க எச்சரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.