Ottawa நகர உயர்நிலைப் பாடசாலையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
திங்கட்கிழமை (13 ) காலை ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை பல மணி நேரம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தது.
இதில் மற்றொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
Hillcrest உயர்நிலைப் பாடசாலையில் இளைஞரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பதின்ம வயது இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவருகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் காயமடைந்த இரண்டாவது நபர் கவலைக்கிடமான நிலையான உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் தானாகவே உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றதாக தெரியவருகிறது.
குறிப்பிட நபரும் அதே பாடசாலையை சேர்ந்தவரா என்ற விபரம் தெளிவாகத் தெரியவில்லை.
ஒரு சந்தேக நபர் சம்பவ இடத்திலும், மேலும் மூவர் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் இதில் கைதான சந்தேக நபர்களை அடையாளம் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. .