முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கனடிய பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Jimmy Carter தனது 100ஆவது வயதில் காலமானார்.
அவரது இறுதி சடங்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
கனடியர்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.